தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் வித்யுத் ஜம்வால் தற்போது தனது அடுத்த படமான கமாண்டோ 2 படத்தின் புரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார். இந்த ஆண்டு மார்ச் 3 ம் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் ஆதக் சர்மா, இஷா குப்தா ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வித்யுத், நடிகர் அஜய் தேவ்கனை புகழ்ந்து பேசினார். பேட்டியில் வித்யுத் கூறுகையில், அஜய் தேவ்கன் மிகப் பெரிய ஆக்சன் ஹீரோ. அஜய்யுடன் இணைந்து பாட்ஷாஹோ படத்தில் நடித்துள்ளதை மிகப் பெரிய அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அவர் நடித்த கங்காஜல் படத்தை நான் 30 முறை பார்த்துள்ளேன். என்ன அற்புதமான நடிகர்? அவர் மிகவும் நேர்மையானவர், தலைக்கனம் இல்லாதவர், எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர் அதனால் தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் இயல்பாக நடக்க கூடியவர். நீங்கள் கூட அதை பார்த்திருப்பீர்கள். இவை எல்லாம் தான் அவருடன் பணியாற்றுவதை அற்புதமாக உணரச் செய்கிறது என்றார்.