அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'வீரம்' படத்தை தெலுங்கில் பவன் கல்யாண், ஸ்ருதிஹாசன் நடிக்க 'கட்டமராயுடு' என்ற பெயரில் ரீமேக் செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் டீசர் சற்று முன் வெளியிட்டார்கள். பவன் கல்யாண் என்றாலே அதிரடி ஆக்ஷன்தான் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்தில் அது இன்னும் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. 51 வினாடிகளே உள்ள டீசரில் பவன் கல்யாணின் அதிரடி ஆக்ஷன்தான் அதிகம் உள்ளது.
அதிலும் டிரெயின் கதவு உடையும் அளவிற்கு பவன் கல்யாண் அடிக்கிறார் என்றால் அந்த ஆக்ஷன் எப்படியிருக்கும் என்பதை நீங்களே பாருங்கள். தமிழில் அஜித் நரைத்த தலைமுடி, தாடியுடன் நடித்திருந்தார். ஆனால், தெலுங்கில் பவன் கல்யாண் அப்படியெல்லாம் நடிக்கவில்லை. இளமையான தோற்றத்தில்தான் நடித்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர், முதல் பார்வை போஸ்டர் வந்த போதே பவன் கல்யாண் ரசிகர்கள் கொண்டாடினார்கள். இப்போது அதிரடியான டீசர் வந்திருக்கிறது, கேட்கவா வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு டோலிவுட்டில் இதுதான் பேச்சாக இருக்கப் போகிறது.
டீசர் லிங்க் : https://youtu.be/-gqmAr3isc8