பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருக்கும் ஷாரூக்கான், தற்போது ரயீஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாக உள்ளது. ரயீஸ் படத்தின் புரொமோஷனுக்காக நேற்று குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா சென்றிருந்தார் ஷாரூக். ரயில், குஜராத்தின் வதோரா வந்தபோது ஷாரூக்கானை காண கட்டுகடங்காத ரசிகர்கள் கூட்டம் கூடியது. ஷாரூக்கானை காணும் ஆவலில் ஏராளமான பேர் அவரை நோக்கி படையெடுத்தனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு ரசிகர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரசிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.