ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த படம் ‛ஓகே கண்மணி'. இதை இயக்குநர் ஷாத் அலி ஹிந்தியில் ‛ஓகே ஜானு' என்று ரீமேக் செய்தார். ஆதித்யா ராய் கபூர் மற்றும் ஸ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகிய முதல் நாளில் ரூ.4.08 கோடி வசூலித்து உள்ளது. படத்தின் வசூல் ஏதிர்பார்த்த அளவு இல்லை என்று படக்குழு தெரிவித்து இருக்கிறது. ஓகே ஜானு படம் இந்த ஒரு வாரத்துக்குள் ரூ.15 கோடி வசூலித்தால் தான் பாக்ஸ் ஆபிஸில் நல்ல இடத்தை பிடிக்கும் இல்லை என்றால் படம் தோல்வியை தழுவும் என்று கூறியுள்ளனர். ஓகே ஜானு படம் கிட்டத்தட்ட ரூ.30கோடி பொருட் செலவில் உருவாகப்பட்டது குறிப்பிடத்தக்கது.