ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் இருக்கும் கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் பிரபலமான வெளிநாட்டு அமைப்பான பீட்டா இவருக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கியுள்ளது. விலங்குகள் நல அமைப்பு என்ற பெயரில் இயங்கி வரும் பீட்டா அமைப்பில், பல்வேறு இந்திய பிரபலங்கள் உறுப்பினர்களாகவும், அதன் விளம்பர தூதர்களாகவும் இருக்கிறார்கள். இந்தி திரையுலகில் கவர்ச்சி நடிகையாக இருக்கும் சன்னி லியோன் பீட்டா அமைப்பில் பல்வேறு விளம்பரங்களில் நடித்திருக்கிறார். சன்னி லியோனின் பங்களிப்புகளை கருத்தில் கொண்டு பீட்டா சார்பில் 'ஆண்டின் சிறந்த நபர்' என்ற விருது வழங்கப்பட்டு உள்ளது. இதனை சன்னி லியோன் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.