பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பாலிவுட்டில் கபூர் குடும்பம் மிகப்பெரியது. அந்தகுடும்பத்திலிருந்து ஏராளமானபேர் திரைத்துறைக்கு வந்துள்ளனர். அந்தவகையில் புதிதாக மற்றொரு வாரிசு களமிறங்கியுள்ளது. அவர் பெயர் ஆதார் ஜெயின். நடிகர் ராஜ்கபூரின் பேரான இவரை தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா ஹீரோவாக அறிமுகம் செய்கிறார். இயக்குநர் ஹபீப் பைசல் இயக்கும் புதிய படத்தை ஆதித்யா தயாரிக்கிறார். இதில் தான் ஆதார் ஜெயின் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். படத்தில் ஆதாருக்கு ஜோடியாக புதுமுக ஹீரோயின் ஒருவர் நடிக்க உள்ளார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. முன்னதாக ராஜ்கபூரின் மூத்த பேரனான அர்மான் ஜோஷி, 2014-ம் ஆண்டு லெகர் ஹம் தீவானா தில் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் தோல்வியை தழுவியது.