ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர்கள் அஜய் தேவ்கனும் ஒருவர். தற்போது தனது கனவுப்படமான சிவாய் படத்தை பிரமாண்ட பொருட்ச்செலவில் தயாரித்திருப்பதோடு, நடித்து, இயக்கவும் செய்திருக்கிறார். அஜய்யுடன் எரிக்கா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்., 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அஜய் அளித்துள்ள பேட்டியில் தான் நட்சத்திர அந்தஸ்த்தை இழந்து வருவதாக கூறினார்.
இதுப்பற்றி அஜய் கூறியிருப்பதாவது... ‛‛நான் என் நட்சத்திர அந்தஸ்த்தை இழக்கிறேனோ என்ற பயம் வந்துள்ளது. மக்கள் நம்மளை கொண்டாடி, திடீரென அதை நிறுத்திவிட்டால் அதை நம்மை பாதிக்கத்தான் செய்யும். நான் இதை வெளிப்படையாக சொல்லிவிட்டேன், இன்னும் சொல்லப்போனால் அத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்று கூட சொல்லலாம் என்று கூறியுள்ளார்.