ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் மோஸ்ட் வான்ட்டட் ஹீரோவாக மாறியிருக்கும் அக்ஷ்ய்குமார், படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வருகிறவர் அடுத்தப்படியாக ஒலிம்பிக்கை மையமாக வைத்து உருவாகும் கதையில் நடிக்க உள்ளார். எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்கும் இப்படத்தை ரீமா காக்தி இயக்குகிறார். ‛கோல்ட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், இந்திய கொடியின் பின்னணியில் 1948-ம் ஆண்டு லண்டனில் நடந்த 14வது ஒலிம்பிக் போட்டியை மையமாக வைத்து தங்கபதக்கத்துடன் கூடிய வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.
இந்தியா, சுதந்திரம் பெற்ற பின்னர் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும். ஆகையால் இந்த கதை லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பங்கை மையப்படுத்திய கதை என்பது தெளிவாகியுள்ளது. அதோடு, படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ‛கோல்டு' படம் 2018-ம் ஆண்டு, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.