தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமீபத்தில் வெளியான ‛பிங்க்' படத்தின் மூலம் எல்லோராலும் பாராட்டு பெற்ற நடிகை கீர்த்தி குல்ஹரி, இவர் அடுத்தப்படியாக பிரபல இயக்குநர் மதுர் பண்டர்கர் இயக்கும் ‛இந்து சர்கார்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இதுப்பற்றி கீர்த்தி கூறியிருப்பதாவது... ‛‛பிங்க் படத்திற்கு பிறகு ஒரு நடிகையாக வருங்காலங்களில் சவாலான வேடங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணினேன். இந்து சர்கார் படம் அந்த சவாலான வேடத்தை தரும் என நினைக்கிறேன். சாந்தினி பாரில் தபு-விற்கு எப்படி ஒரு சவாலான வேடம் இருந்ததோ, அதைப்போன்றதொரு வேடம் எனக்கு இதில் இருக்கும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இந்து சர்கார் படத்தின் கதை, 1975-ம் ஆண்டில் நாடு முழுக்க பிறப்பிக்கப்பட்ட 21 மாதம் எமர்ஜென்சி காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங்கை நவ., முதல் ஆரம்பிக்க உள்ளார் மதுர் பண்டர்கர்.