இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை தன்வி அஸ்மியின் உறவினர் நடிகை சியாமி கெர். தெலுங்கில் ரே படத்தில் நடித்தவர், பாலிவுட்டில் ‛மிர்சியா' படத்தின் மூலம் என்ட்ரியாகியுள்ளார். இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வருகிற அக்., 7-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் சியாமி அளித்த பேட்டி ஒன்றில் தான் ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... ‛‛நான் ஒருவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலிக்கிறேன். அவர் என்னுடைய கல்லூரி காலத்து நண்பர். சினிமாவிற்கு முற்றிலும் தொடர்பு இல்லாதவர் அவர். எதிர்காலத்தில் எங்களது வாழ்க்கை எந்தமாதிரி அமைய போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நான் அவரை தீவிரமாக காதலிக்கிறேன், அவரும் என்னை தீவிரமாக காதலிக்கிறார் என்று கூறியுள்ளார்.