‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகாவும், பிரியங்காவும் ஹாலிவுட் சென்றதிலிருந்து பாலிவுட்டின் ‛மோஸ்ட் வான்டட்' ஹீரோயின்களாக மாறியிருக்கிறார்கள். இதனிடையே க்ரிஷ் படங்களின் வரிசையில் அடுத்தப்படியாக க்ரிஷ்-4 படம் உருவாக இருக்கிறது. இதில் பிரியங்கா சோப்ரா நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இப்போது அவருக்கு பதில் தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரியங்கா, தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பதால் தீபிகாவை நடிக்க வைக்க எண்ணியுள்ளனர்.
இயக்குநர் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஹீரோவாக நடித்த க்ரிஷ் படங்களின் வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இதைத்தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இப்போது க்ரிஷ்-4 படத்திற்கான வேலைகளில் மும்முரமாய் ஈடுபட்டுள்ளார். தற்போது ஹிருத்திக் காபில் படத்தில் பிஸியாக இருப்பதால் அதை முடித்ததும் க்ரிஷ்-4க்கான பணிகள் மேலும் தீவிரமாகும் என தெரிகிறது. க்ரிஷ்-4 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.