பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹிந்தி திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் அர்ஜூன் கபூர். சில மாதங்களுக்கு முன் வெளியாகிய ‛கி & கா' படம் வெற்றி அடைந்தது மட்டும் இல்லாமல், அர்ஜூன் கபூருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து தற்போது அர்ஜூன், இயக்குநர் மொகித் சூரி இயக்கத்தில், இந்திய எழுத்தாளர் சேதன் பகத் எழுதிய ‛ஹாப் கேர்ள்பிரண்ட்'படத்தில் நடித்து வருகிறார். அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்து உள்ளார். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த ஒரு பிரஸ் மீட்டில் ‛ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தை பற்றி அர்ஜூன் பேசினார்.
அர்ஜூன் கூறியதாவது... "‛ஹாப் கேர்ள்பிரண்ட்' படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், கடினமாகவும் இருந்தது. இந்தப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. மேலும் மொகித், ஸ்ரத்தாவுடன் பணியாற்றியது மிகவும் பிடித்து இருந்தது. ஹாப்கேர்ள்பிரண்ட்' படம் என் மனதை உருக்கும் படமாக அமைந்துள்ளது. ஏனென்றால் என் ரோல் அப்படி சிறப்பாக அமைந்து இருக்கிறது. எல்லோரும் படத்தை மகிழ்ந்து பார்ப்பார்கள், படத்தின் ரிலீஸை எதிர்ப்பார்க்கிறேன்" என்று கூறினார்.
ஹாப்கேர்ள்பிரண்ட்' படம் அடுத்த ஆண்டு, மே மாதம் 19ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து உள்ளது.