'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சல்மான் கான் நடிக்கும் ட்யூப்லைட் படத்தின் சூட்டிங் லடாக்கில் நேற்று துவங்கியது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இந்நிலையில் இப்படத்தின் கதைகளம் தற்போது வெளியாகி உள்ளது. ட்யூப்லைட் படம், 1960 - 62 ம் ஆண்டுகளில் நடக்கும் எல்லை தாண்டி செல்லும் காதல் கதையாம். இந்தியாவில் இருந்து எல்லை தாண்டிச் செல்லும் ஒரு இளைஞனுக்கு, சீனாவில் உள்ள பெண்ணுடன் ஏற்படும் காதலை மையமாக கொண்டது தான் ட்பூப்லைட் படத்தின் கதையாம். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் நடந்த காலத்தில் நடப்பதாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பது யார் என்பது குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை. கபீர் கான் இயக்கும் இப்படம் 2017ம் ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.