ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜக்கா ஜசோஸ் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கூறப்பட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் ஜக்கா ஜசோஸ் படம் பற்றி ரன்பீர் கபூரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஜக்கா ஜசோஸ் படம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். அந்த படத்தின் ரிலீசிற்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இதற்காக 3 வருடங்களை நாங்கள் செலவிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடையும் என நம்புகிறேன் என்றார். அனுராக் பாசு இயக்கி உள்ள இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். இப்படத்தில் ரன்பீருடன் கத்ரீனா கைப்பும் நடித்துள்ளார்.