நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
ஹிந்தி திரையுலகில் பிரபலமான ஹீரோக்களில் சல்மான் கானும் ஒருவர். சமீபத்தில் சல்மான் நடித்து வெளிவந்து வசூலை குவித்து வரும் படம் சுல்தான். இப்படத்திற்கு பிறகு சல்மான் கான் தனது சகோதரர் இயக்கும் தபாங் 3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சல்மான் கானை வைத்து ஏழு வருடத்திற்கு முன் வான்டட் என்ற வெற்றி படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநரானார் பிரபுதேவா. அதன்பின்னர் தொடர்ந்து சில படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக உயர்ந்தார். இந்நிலையில் மீண்டும் சல்மானை வைத்து ஒரு படத்தை இயக்க எண்ணியுள்ளார் பிரபுதேவா.
இதைப்பற்றி பிரபுதேவா கூறியதாவது... "என்னிடம் ஒரு கதை உள்ளது அந்தப்படத்திற்கு சல்மான் தான் பொருத்தமாக இருப்பார். அவருடன் பணியாற்றுவது எளிது இல்லை, அவர் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய வேண்டும் என்று எண்ணுபவர். ‛வான்டட்' படம் தான் எனக்கும், சல்மான் கானுக்கும் திருப்பு முனையை எற்படுத்தியது. நாங்கள் மீண்டும் இணையும் படம் சிறப்பாக இருக்கும் " என்றார்.