ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காமெடி, ஆக்ஷ்ன் என வித்தியாசமாக கலந்து கட்டி நடித்து வரும் அக்ஷ்ய் குமார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‛ருஸ்டம்'. டினு சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்தில் அக்ஷ்ய் உடன் இலியானா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுப்பற்றி அக்ஷ்ய் குமார் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛உண்மையாகவே ருஸ்டம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாம் ஒரு விஷயம் செய்யும் போது அது மக்களால் அங்கிகரீக்கப்பட்டால் தான் அதில் மகிழ்ச்சி. அந்த வகையில் ருஸ்டம் படத்தின் டிரைலரை மக்கள் வரவேற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.