'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஊழலுக்கு எதிராக போராடியவர் காந்தியவாதி அன்னா ஹசாரே. தற்போது இவரது வாழ்க்கையை சினிமாவாக எடுத்து வருகிறார் நடிகரும், இயக்குநருமான சாசாங் உதாப்புர்கர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சாசாங் நிகழ்ச்சியில் வெளியிட்டார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை காந்தியவாதி அன்னா ஹசாரேவே வெளியிட்டார். இடி, மின்னல்களுக்கு நடுவே அன்னா, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவது போன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அன்னா ஹசாரே, இயக்குநர் சாசாங், நடிகை தனிஷா முகர்ஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அன்னா படத்தை ராலேகான், சித்தி, மும்பை, டில்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படமாக்கியுள்ளார் இயக்குநர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியிருக்கும் அன்னா படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.