ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் பிஸியான நடிகை ப்ரியங்கா, பாலிவுட் சினிமாவையும் தாண்டி, தற்போது ஹாலிவுட்டிலும் அசத்தி வருகிறார். ஹாலிவுட்டின் ‛குவாண்டிகோ' டிவி சீரியல் மற்றும் ‛பேவாட்ச்' படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட் படவாய்ப்பால் ஹிந்தி படங்களை தவிர்த்து வருகிறார் ப்ரியங்கா சோப்ரா. இதனிடையே ப்ரியங்கா சோப்ரா, அடுத்தாண்டு வெறும் இரண்டு படங்களில் மட்டும் தான் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து ப்ரியங்கா சோப்ரா அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது... ‛‛தற்போது நான் 16 கதைகளை கேட்டு வருகிறேன். இதில் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களும் அடக்கம். அடுத்தாண்டு வெறும் இரண்டு படங்களில் மட்டும் தான் நடிக்கிறேன். ஏனென்றால் ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்ய எனக்கு அதிக நேரமாகிறது என்று கூறியுள்ளார்.