ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர்கபூர், கத்ரீனா கைப் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஜகா ஜசூஸ்'. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக இப்படத்தை இந்தாண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய எண்ணியிருந்தனர் படக்குழுவினர். ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அடுத்தாண்டுக்கு தள்ளிபோய் உள்ளது.
நடிகர் ரன்பீர் கபூர், தான் நடித்துள்ள ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தை ‛ஜகா ஜசூஸ்' படத்திற்கு முன்பு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கருதுகிறாராம். இதுப்பற்றி தயாரிப்பாளர் சித்தார்த்ராய் கபூரிடம், ரன்பீர் பேசியதாகவும், சித்தார்த்தும் அதற்கு சம்மதம் சொன்னதால் ஜகா ஜசூஸ் படத்தை அடுத்தாண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.