‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான், டான்-2 படங்களின் வரிசையில் விரைவில் டான்-3 படமும் உருவாக இருக்கிறது. இதில் வழக்கம் போல் ஷாரூக் ஹீரோவாக நடிக்கிறார். இரண்டு பாகங்களை போல இந்தப்படத்திலும் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா இப்படத்தில் நடிக்கவில்லை. ஹாலிவுட்டில் பிஸியாக இருப்பதால் ப்ரியங்கா டான்-3யில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே ப்ரியங்கா வேடத்தில் இப்போது ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. இதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. டான்-3 படத்தையும் பர்கான் அக்தரே இயக்க உள்ளார், எக்ஸல் என்டர்டெயின்ட்மென்ட் தயாரிக்க உள்ளது.