டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து 2012ம் ஆண்டு வெளிவந்த 'முகமூடி' படத்தை எத்தனை பேர் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள். அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர்தான் பூஜா ஹெக்டே. 2010ம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் ரன்னர்-அப்-பாக வந்தவர்தான் பூஜா. அதன் பின் மாடலிங்கிலும் புகழ் பெற்ற பூஜாவை, தன்னுடைய 'முகமூடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகப்படுத்தினார் மிஷ்கின். பூஜாவின் போதாத காலம் 'முகமூடி' படம் மூன்று நாட்களுக்குக் கூடத் தாக்குப் பிடிக்காமல் மாபெரும் தோல்வி கண்டது. அதன் பின் தெலுங்கில் 'ஒக லைலா கோசம், முகுந்தா' படங்களில் நடித்தார் பூஜா.
ஹிந்தித் திரையுலகின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரும், 'லகான், ஜோதா அக்பர்' போன்ற அற்புதமான படங்களை இயக்கி அஷுதோஷ் கௌரிக்கர் 'மொகஞ்சதோரோ' படத்திற்காக பூஜா ஹெக்டேவை நாயகியாக ஒப்பந்தம் செய்த போது அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
இப்போது 'மொகஞ்சதாரோ' படம் இறுதிக் கட்டப் பணிகளை எட்டியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் டீசரையும் வெளியிட்டார்கள். ஏ.ஆர்.ரகுமான் பரபரப்பாக பின்னணி இசையமைத்துக் கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி படம் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
படம் வெளிவந்தபின் பூஜா ஹெக்டே இந்தியத் திரையுலகின் முக்கியமான நாயகிகளில் ஒருவராக முன்னேற்றம் அடைவார் என படக்குழுவினர் இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.