ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில், சல்மான்கான், அனுஷ்கா சர்மா, ரன்தீப் ஹூடா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சுல்தான்'. சல்மான் இப்படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே சுல்தான் படத்தின் டீசர் வெளியாகி ஹிட் அடித்த நிலையில் நேற்றுமுன்தினம் சுல்தான் படத்தின் டிரைலரும் வெளியாகி யூ-டியூப்பை கலக்கி வருகிறது.
'சுல்தான்' பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மானிடத்தில், சுல்தான் படம் உங்களின் முந்தைய படங்களின் சாதனையை முறியடிக்குமா என்று கேட்டபோது அவர் கூறியதாவது... ''நாங்கள் எங்களின் பெஸ்ட்டை கொடுத்துள்ளோம். இந்தப்படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள், நிச்சயம் பாலிவுட்டில் பெரிய ஹிட்டாக இந்த சுல்தான் படம் அமையும். என் முந்தைய படங்களின் சாதனையை எல்லாம் இந்த சுல்தான் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.
24ம் தேதி வெளியிடப்பட்ட 'சுல்தான்' படத்தின் டிரைலரை இருதினங்களில் சுமார் 52 லட்சத்திற்கும் அதிகமானபேர் பார்த்துள்ளனர். மேலும் 94 ஆயிரம் லைக்ஸூம் கிடைத்துள்ளது. சுல்தான் படம் ரம்ஜான் விருந்தால் ஜூலை 6ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.