ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீப காலமாக, சமூக வலைதளங்களில், கலக்கு கலக்கு என கலக்கி வருகிறது, சைராட் என்ற மராத்தி மொழி படம். வெளியான ஒரு சில நாட்களிலேயே, 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மராத்தி படங்களுக்கு இதெல்லாம் சாத்தியமான விஷயமே இல்லை. ஜாதிய தீவிரவாதம், கலப்பு திருமணம் ஆகிய, சமகால நடப்புகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ரிங்கு என்ற பெண்ணும், ஆகாஷ் என்ற பையனும் நிஜமான காதலர்களை போல் நடித்து அசத்தியுள்ளனர். ரிங்குவிற்கு, 15 வயது தான் ஆகிறது. அதற்குள், இந்த படத்துக்காக தேசிய விருதை பெற்றுள்ளார். மொழி புரியாவிட்டாலும், படத்தின் ஒவ்வொரு காட்சியும், பார்வையாளர்களை கட்டிப் போடுகின்றன. நீங்களும் பாருங்களேன்; ராயல் என்பீல்டை அலட்சியமாக ஓட்டிச் செல்லும், ரிங்குவின் நடிப்பு, உங்களையும் வசியம் செய்யக் கூடும்.