இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுல்தான் படத்தை சமீபத்தில் முடித்த சல்மான் கான், அடுத்தப்படியாக கபீர்கான் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். இதுதவிர ராஜ்குமார் சந்தோஷியும் சல்மானுக்காக ஒரு படம் இயக்குகிறார். ஆக்ஷ்ன் மற்றும் ரொமான்ட்டிக் படமாக உருவாக உள்ள இப்படத்தில் சல்மான் ஜோடியாக கத்ரீனா கைப்பை நடிக்க வைக்க எண்ணியுள்ளார் ராஜ்குமார் சந்தோஷி. இதுதொடர்பாக கத்ரீனாவிடம் இயக்குநர் பேசிவருகிறார். கத்ரீனாவும் சல்மான் படத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை சல்மானின் சகோதரி அல்விரா அக்னிகோத்ரி தயாரிக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.