ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், இப்போது 'சுல்தான்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் 'பிரேம் ரத்தன் தன் பயோ' படத்தின் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சல்மான். ஆக்ஷ்ன் படமாக உருவாகவுள்ள இப்படத்தை முதலில் சூரஜ் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்போது அவர் இயக்கவில்லையாம். தெலுங்கு இயக்குநரான சுகுமார் தான் இப்படத்தை இயக்குகிறாராம். சூரஜ் இப்படத்தை தயாரிக்க மட்டும் உள்ளார். சல்மான் நடிக்கவுள்ள இப்படம் தென்னிந்தியாவில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.