தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இயக்குநர் விஜய் இயக்கத்தில், விக்ரம், அனுஷ்கா, எமிஜாக்சன் நடிப்பில் வெளியான படம் 'தாண்டவம்'. இப்படம் எதிர்பார்த்தளவுக்கு ஓடவில்லை. இருந்தாலும் விக்ரமின் பார்வையற்ற நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. இந்நிலையில் ஹிந்தியில், ஹிருத்திக் ரோஷன் 'காபில்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹிருத்திக் பார்வையற்றவராக நடிக்கிறார் என்று சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், இப்படம் தமிழில் வெளியான 'தாண்டவம்' படத்தின் தழுவல் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. காபில் படத்தை சஞ்சய் குப்தா இயக்குகிறார், ஹிருத்திக் ஜோடியாக யாமி கெளதமி நடிக்கிறார். ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோஷன் தயாரிக்கிறார். இப்படம் அடுத்தாண்டு ஜன.,26ம் தேதி வெளியாக இருக்கிறது.