மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
'தில்வாலே, ஃபேன்' படங்களை தொடர்ந்து ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ரயீஸ்'. ஷாரூக்கான் தாதாவாக நடிக்கிறார். இப்படம் வெளியாவது தொடர்பாக, தொடர்ந்து பல குழப்பங்கள் நீடித்து வந்தது. இப்போது அந்த குழப்பத்திற்கு எல்லாம் தீர்வு கிடைத்துவிட்டது. ரயீஸ் படம் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீஸாவதாக படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து படக்குழு சார்பில் கூறியிருப்பதாவது... ''ரயீஸ் படம் மிகவும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்தளவுக்கு இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். எனவே படத்தை 2017, ஜனவரி 26ம் தேதி ரிலீஸ் செய்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயீஸ் படம் வெளியாகும் அன்றைய தினம் தான் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் பாத்ஷாகோ படமும், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகி வரும் காபில் படமும் வெளியாகிறது. ஆகவே அன்றைய தினம் மூன்று நடிகர்களின் படங்களும் மோதிக்கொள்வது உறுதியாகியுள்ளது.