ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைகர் ஷெரப் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பாகி'. டைகர் ஷெரப்புடன் ஸ்ரத்தா கபூர், சுதீர்பாபு ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்துள்ளபோதும், படத்தின் முதல்நாள் வசூல் நன்றாக இருப்பதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் முதல்நாளில் ரூ.11.87 கோடி வசூலித்துள்ளது. தற்போதைக்கு பாலிவுட்டில் வேறு பெரிய படங்கள் இல்லாததால் பாகி படம் மேலும் நன்றாக வசூலிக்கும் என்கிறார்கள்.
அதுமட்டுமல்ல இந்தாண்டு வெளியான படங்களில் ஒரேநாளில் அதிகம் வசூலித்த படங்களில் 3வது இடத்தை பிடித்திருக்கிறது இந்த பாகி. இதற்கு முன்னர் ஷாரூக்கானின் 'ஃபேன்' படம் முதல்நாளில் ரூ.19.20 கோடியும், அக்ஷ்ய்குமாரின் 'ஏர்லிப்ட்' படம் ரூ.12.35 கோடியும் வசூலித்துள்ளன.