இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அசார்'. கிரிக்கெட் வீரர் அசாரூதின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புரமோஷன் வேலைகளில் தீவிரமாக உள்ளார் இம்ரான். அவர் அளித்த பேட்டி ஒன்றில் மர்டர்-4 படம் பற்றி பேசியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது... 'மர்டர்-4' படத்திலும் நடிக்கும் ஆசை உள்ளது. ஆனால் இப்படம் இன்னும் கதையளவிலேயே உள்ளது. இன்னும் இப்படத்தில் நடிப்பது பற்றி உறுதியான முடிவு எடுக்கவில்லை. ஒருவேளை கதை கேட்டு, எனக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
மர்டர், மர்டர்2 படங்களில் நடித்த இம்ரான், மர்டர்-3யிலும் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசிநேரத்தில் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவர் விலகினார். இந்நிலையில் மர்டர்-4 படத்தில் இம்ரான் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.