வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா, முன்னாள் தாதாவும் தற்போதய தொழிலதிபருமான முத்தப்பா ராய்-யின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கி வரும் ராய் படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் விவேக் ஒப்ராய் நாயகனாக நடித்து வருகின்றார். ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் திரைக்கு வரவுள்ளதாம். இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை விழாவாக நடத்த படக்குழு ஏற்பாடு செய்து வருகின்றது.
முத்தப்பா ராய்யின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படவுள்ளதாம். பெங்களூரில் உள்ள பிடாடியில் நடைபெறவுள்ள இவ்விழாவில் அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்களுடன் 5000 பார்வையாளர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். தயாரிப்பாளர் சி.ஆர். மனோகர் ரூ 55 கோடி செலவில் இப்படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டன்,மும்பை, துபாய் மற்றும் பெங்களூரில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.