புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
நடிகர் வருண் தவான், ஜூத்வா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என கடந்த சில நாட்களுக்கு முன்னரே கூறி இருந்தோம். சமீபத்தில் ஜூத்வா படத்தின் 2ம் பாகம் பற்றி வருண் தவானிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், இது எனக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு. இப்படம் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. இது முந்தைய பாகத்தில் இருந்து முற்றிலும் புதியதாகவும், மாறுபட்டதாகவும் இருக்கும். எனது தந்தையும், சஜித் நதியாத்வாலாவும் ஏற்கனவே தங்களின் திறமையை நிரூபித்து விட்டனர். நான் இந்த படத்திற்கு புதிதாக வந்துள்ளதால் எனது திறமையை நான் நிரூபிப்பேன். இரட்டை வேடத்தில் நடிப்பது மிகவும் கடினமானது. எனக்கு இன்னமும் நிறைய நேரம் உள்ளது. கதை தயாரிக்கும் பணி இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக இது என புதிதாக இருக்கும் என நினைக்கிறேன். எனக்கு நடுக்கமாகவும், அதே சமயம் மிகுந்த ஆர்வமாகவும் உள்ளது என்றார்.