பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
படத்துக்கு படம் தன்னை வித்தியாசம் படுத்திக் கொள்ள வேண்டும், புதிய தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாக வாழ வேண்டும் என்று நடிகர்கள், நடிகையர்கள் உடல் எடையை கூட்டுவது, குறைப்பது என்பது வழக்கம். ஆனால், பாலிவுட் பேரழகி, கோலிவுட் முன்னணி நடிகர்கள் பலரும் வலைவீசியும் சிக்காத கத்ரினா கைஃப், இதுவரை தனது எந்த படத்திற்கும் தோற்றத்தை மாற்றியது இல்லை. அவர் அழகு பதுமையாகவே வந்து தன் நடிப்பால் அசத்திவிட்டு சென்றுவிடுவார்.
இந்நிலையில் அவர் தற்போது நடிக்கவுள்ள புது படமான 'பார் பார் தேகோ' படத்திற்காக, தனது சிகையை சிறியதாக கத்தரித்துள்ளார் கத்ரினா. நித்யா மெஹ்ரா இயக்கம் இப்படத்தில், கத்ரினாவுக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாக நடிக்கின்றார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிக்கவுள்ளார். 2016ஆம் ஆண்டு படத்தை வெளியிட படக்குழுவினர் முழுவீச்சில் பணிகளை செய்து வருகின்றனர்.