ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சல்மான் கான் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளிவந்த படம் பிரேம் ரத்தன் தான் பயோ. பஜ்ரங்கி பைஜான் எனும் மாபெரும் வெற்றி படத்திற்கு பின்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனால் அதேசமயம் படத்தின் வசூலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த இரண்டு வாரத்தில் இப்படம் ரூ.203.60 கோடி வசூலித்துள்ளது. இரண்டு வார வசூலை ஒப்பிடும் போது இப்படம் ஏக்தா கபூர், 3 இடியட்ஸ் படங்களின் வசூலை முறியடித்து இருக்கிறது. இன்னும் சில தினங்களில் இப்படம் ஹேப்பி நியூ இயர் படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.