ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சீனிகம், பா, ஷமிதாப் படங்கள் மூலம் புகழ் பெற்றவர் இயக்குனர் பால்கி. தமிழ் நாட்டுக்காரர். சீனிகம், பா கொடுத்த வெற்றியை ஷமிதாப் கொடுக்கவில்லை. அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் நடிப்பு பேசப்பட்டாலும் படம் வசூலை கொடுக்கவில்லை. இதனால் உடனேயே பால்கி ஆரம்பித்த படம், ''கி அண்ட் கா''. அவரது டீம் அப்படியே இதிலும்... பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு, இளையராஜா இசை. அர்ஜுன் கபூர், கரீனா கபூர் ஜோடி. அமிதாப் பச்சன், ஜெயாபச்சன் நடித்துள்ளனர் இந்த 4 கேரக்டர்களை மையமாக கொண்ட படம். ஒரு திருமணத்தில் தொடங்கும் கதை. திருமணத்துக்கு பிறகான தம்பதிகளின் நெருக்கம், எதிர்பார்ப்பு, கூடல், ஊடல்தான் கதை. சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் நிறைந்த பால்கி ஸ்டைல் படம்.
பக்கா கமர்ஷில் படங்களில் நடித்துக் கொண்டிருந்த கரீனா கபூர், கதை பிடித்து எளிய கேரக்டரில் அதிக மேக்அப் இல்லாமல் யதார்த்தமாக நடித்துள்ளார். இந்தப் படத்தை மிகச் சரியாக திட்டமிட்டு 50 நாளில் எடுத்துள்ளார் பால்கி. ஒரு இந்தி கமர்ஷியல் படம் இத்தனை குறைவான நாளில் எடுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்கிறார்கள். தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. மார்ச் 16ந் தேதி வெளியிட திட்டமிட்டிருக்கிறார் பால்கி.