ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜய் தேவ்கன் நடித்து வரும் சிவாய் படத்தில் அவரது மகளாக நடிப்பதற்கு பிரிட்டனின் புகழ்பெற்ற குழந்தை நட்சத்திரமான அபிகெயில் ஏம்ஸை அணுகி உள்ளாராம். அஜய் தேவ்கன், அபிகெயிலின் தீவிர ரசிகராம். அவர் நடித்த ஹாலிவுட் படங்கள் மற்றும் ஆங்கில டிவி தொடர்களை அஜய் தேவ்கன் விடாமல் பார்ப்பதால், .தனது மகளாக நடிக்க அபிகெயிலிடம் கேட்டுள்ளாராம். 2013ல் வந்த லாலெஸ், 2014ல் வந்த ஹாரி அன்ட் பால்ஸ் ஸ்டோரி ஆப் 2 மற்றும் 2015 ல் வெளியான தி ஆக்ஷன் த்ரில்லர் ஆலாய்கட்ஸ் போன்ற படங்களை பார்த்து தான் அஜய் தேவ்கன், அபிகெயிலை தனது மகளாக நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தாராம். சிவாய் படம், கரன் ஜோகரின் ஏய் தில் ஹய் முஸ்கில் படத்துடன் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. சிவாய் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்க உள்ளது.