தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
குழந்தை பிறப்பால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்த நடிகை ஐஸ்வர்யா ராய், மீண்டும் ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியிருக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் இர்பான் கான் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்தப்படம் வெளியாகும் முன்பே இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளார்கள். விஷால் பரத்வாஜ் இயக்கும் படத்தில் இர்பானும், ஐஸ்வர்யாவும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா-இர்பானை சந்தித்து தனது அடுத்தப்படம் பற்றி பேசியிருக்கிறார் விஷால் பரத்வாஜ். ஆகையால் விரைவில் இந்த ஜோடி மீண்டும் இணையலாம் என தெரிகிறது.