வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் கங்கனா ரணாவத், அடுத்தப்படியாக தனது, ''கட்டி பட்டி'' படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நடிகர்களுடன் டேட்டிங் போவது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்கனா, ''என்னை பொறுத்தவரை நடிகர்களுடன் டேட்டிங் எல்லாம் ஆரோக்கியமான விஷயம் கிடையாது. அதுவும் மிகவும் கஷ்டமான விஷயம். பொதுவாக பெண்கள் என்றாலே அவர்களுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. டேட்டிங் செய் என்று யாரும் உங்களை கட்டாயப்படுத்த முடியாது. நடிகருடன் டேட்டிங் செய்யும் போது சம்பந்தப்பட்டவர் பாதுகாப்புடனும், பெருமைமிக்கவராகவும் இருக்க வேண்டும். அப்படி ஒருவேளை அது தோல்வியில் முடிந்தால் பெரும் சோகத்தை ஏற்படுத்தும். ஆகவே டேட்டிங் செய்யாமல் இருப்பதே நல்லது என்று கூறுகிறார் கங்கனா.