‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான கிக் படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதுடன் வசூலிலும் சக்கை போடு போட்டது. இப்படம் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் தில்லாலங்கடி என்ற பெயரிலும் ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் கிக் என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஹிந்தியில் சல்மான் கான் நடித்த கிக் படம் வசூலில் சாதனை படைத்தது. சல்மான் கானின் திரையுலக வாழ்க்கையில் அதிக வசூல் சாதனை செய்த படங்களின் வரிசையில் கிக் படம் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. கிக் படத்தின் இரண்டாம் பாகமாக கிக் 2 படம் ரவி தேஜா நடிப்பில் தெலுங்கில் திரைக்கு வந்தது. அண்மையில் திரைக்கு வந்த இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் கிக் 2 படத்தை சல்மான் கான் ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பவில்லையாம். கிக் படத்தின் இரண்டாம் பாகமாக ஹிந்தியிலும் கிக் 2 படம் உருவாகின்றது. இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சல்மான்கான் இப்படத்தின் கதை தெலுங்கு கிக் 2 படத்தின் கதை இல்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.