ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை (28ம்தேதி) கொண்டாட இருப்பதையொட்டி, நடிகை அசின், இந்த ஓணத்தை, வருங்கால கணவர் ராகுலுடன் இணைந்து கொண்டாட உள்ளார். கேரள மாநிலம் தாயகமாக இருந்தாலும், கோலிவுட்டில் முன்னணி நடிகையாக விளங்கிய அசின், பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்ட முயற்சித்தார். ஆனால், அம்முயற்சி பலனளிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.. இதனிடையே, அசின், தன் காதலர் ராகுலை விரைவில் திருமணம் செய்ய உள்ளார். தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தை நடத்திவரும் ராகுல், தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். நாளை (28ம்தேதி) ஓணம் கோலாகலமாக கொண்டாட இருப்பதையொட்டி, அசின் தன் குடும்பத்தினருடன் ஓணத்தை கொண்டாட உள்ளார். இந்த ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள, வருங்கால கணவர் ராகுலும், அமெரிக்காவிலிருந்து வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.