இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரித்தேஷ் தேஷ்முக் - புல்கிட் சாம்ராட் நடித்துள்ள "பங்கிஸ்தான்" படத்திற்கு, பாகிஸ்தான் நாட்டில் தடை விதித்துள்ளது. இதுகுறித்து, படத்தின் இணை தயாரிப்பாளரான ரித்தேஷ் சித்வானி கூறியதாவது, பாகிஸ்தானின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. ஏனெனில், படத்தின் டிரைலர் மட்டுமே தற்போது ரிலீசாகியுள்ளது. இந்த படம் பாகிஸ்தானிற்கு எதிரான படமோ அல்லது இஸ்லாமிய மதத்திற்கு எதிரான படமோ அல்ல. பாகிஸ்தான் சென்சார் போர்டிற்கு நேரில் சென்று, தங்களது முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்போவதாக அவர் கூறினார். பங்கிஸ்தான் படம், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.