ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ |
பாக் மில்கா பாக் எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்த ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அடுத்து இயக்க இருக்கும் படம் மிர்சியா. நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக அறிமுகமாகிறார், அவருடன் சாயாமி கெர் ஹீரோயினாக நடிக்கிறார். அட்டகாசமான காதல் படமாக இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர். ராஜஸ்தானை மையமாக வைத்து இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார். இப்படத்திற்காக பல திறமைவாய்ந்த கலைஞர்களை பணியாற்ற வைத்துள்ளார். அதுமட்டுமின்றி படத்தின் ஷூட்டிங் முடியும் வரை வௌியில் படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயமும் வெளியாக கூடாது என்று படக்குழு அதிரடி உத்தரவு போட்டிருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், அடுத்தாண்டு 2016, மே 13ம் தேதி மிர்சியா படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.