மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அக்ஷ்ய் குமார் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் நமஸ்தே லண்டன். இப்போது இதன் இரண்டாம் பாகமாக நமஸ்தே இங்கிலாந்து உருவாக இருக்கிறது. விபுல் ஷா இயக்கும் இப்படத்திற்கு இன்னும் ஹீரோயின் முடிவாகவில்லை. இந்தசூழலில் இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கவே இல்லை, ஆனால் அதற்குள் இப்படத்தின் உலகளாவிய உரிமைய பிரபல நிறுவனமான டி.சீரிஸ் வாங்கியுள்ளது. சுமார் ரூ.75 கோடி கொடுத்து இப்படத்தை வாங்கியிருக்கிறது டி-சீரிஸ் நிறுவனம். அடுத்த ஆண்டு, ஜனவரி மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது, பஞ்சாப், லண்டன் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. 2016ம் ஆண்டு ஜூன் அல்லது ஜூலையில் படம் ரிலீஸாகும் என தெரிகிறது.