இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வௌியான படம் பி.கே., அமீர்கான்-அனுஷ்கா இருவரும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்திய சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாகவும் பி.கே. திகழ்கிறது.
பொதுவாக பாலிவுட் படங்களுக்கு சீனாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் அமீர்கானின் படங்களுக்கு சீன ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. பிகே படம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சீனாவில் வௌியானது. இந்தியாவை காட்டிலும் சீனாவில் அதிகளவு தியேட்டர்களில் பிகே. படம் வௌியானது. முதல் ஒருவாரத்தில் ரூ.33.75 கோடி வசூலித்த பி.கே. படம் இப்போது இரண்டாம் வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இதுநாள் வரை இப்படம் ரூ.62 கோடி வசூல் செய்திருக்கிறது.
இந்திய படம் ஒன்று சீனாவில் இந்தளவு வசூல் செய்வது இதுவே முதல்முறையாகும். தங்கள் பல கடந்த பின்னரும் பிகே.,வின் வசூல் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஒருவாரத்தில் சீனாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.