தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
பிரபலமான நூடுல்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருக்கிறார் நடிகை மாதுரி தீட்சித். அந்த நூடுல்சின் விளம்பரப் படத்திலும் நடித்துள்ளார். மக்களுக்கு நன்கு அறிமுமான அந்த நூடுல்சில் மோனோ சைடியம் குளூடாமேட் உப்பு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு நிர்வாக அமைப்பு கண்டுபிடித்துள்ளது. நீண்ட நாள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த உப்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்க கூடியது. இதையடுத்த உத்தரபிரதேசத்தில் அந்த நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்திற்கு உத்தர பிரதேச மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. "நீங்கள் குறிப்பிட்ட அந்த நூடுல்ஸ் சத்தானது என்று விளம்பரத்தில் கூறுகிறீர்கள் அதனை 15 நாட்களுக்குள் நிரூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் உணவு கலப்பட சட்டத்தின் கீழ் உங்கள் மீது வழக்கு தொடரப்படும்" என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பு எதிலும் மோனோ சோடியம் குளூடா மேட் உப்பு அளவுக்கு அதிகமா பயன்படுத்தவில்லை. அதனை நிரூபிக்கத் தயார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.