மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவுக்கு எப்படி ஒரு ஷங்கரோ, அப்படித்தான் தெலுங்கு சினிமாவுக்கு ராஜமௌலி. தெலுங்கு சினிமா மட்டுமல்லாது தமிழ், இந்தி உள்ளிட்ட இந்திய சினிமாவே பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒருபடம் பாகுபலி. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல்பாகம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரித்திர பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், அனிமேஷன் உள்ளிட்ட பல விஷூவல் எபெக்ட்ஸ் உடன் பிரமாண்டமாய் உருவாகியுள்ளது. தெலுங்கு மட்டுமல்லாது தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் இப்படம் உருவாக இருக்கிறது.
பாகுபலி படத்தின் இந்தி பதிப்பின் டிரைலர் வருகிற ஜூன் 1ம் தேதி வௌியாக இருக்கிறது. இதனை கரண் ஜோகர் வௌியிட இருக்கிறார். டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் டிரைலரை வௌியிட இருக்கின்றனர்.