Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பத்தாண்டுகளுக்கு பின் நான் இயக்குநராக இருப்பேன் - கங்கனா ரணாவத்!

22 மே, 2015 - 12:37 IST
எழுத்தின் அளவு:
After-10-Years-I-see-myself-in-Direction--Kangana-Ranaut

குயின் படத்திற்காக தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கும் கங்கனா ரணாவத்தின் நடிப்பில் அடுத்து வௌியாக இருக்கும் படம் தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ். தனு வெட்ஸ் மானு படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இப்படத்தை பற்றி கங்கனா என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்...


தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தில் நடிக்க என்ன காரணம்.?


முதல்பாகத்தில் எப்படி இரண்டு பேர் காதலித்து, திருமண பந்தத்தில் இணைகிறார்கள் என்பதை சொல்லியிருந்தோம். இரண்டாம் பாகத்தில், திருமணத்திற்கு பிறகு அவர்கள் எப்படி வாழ்கிறார்கள், காதலையும் தாண்டி அவர்களுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான விஷயங்கள் தான் இப்படம். ரசிகர்களுக்கு இப்படம் நிச்சயம் ஒரு புதுவித உணர்வை கொடுக்கும்.


இரட்டை வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி.?


இந்தப்படத்தில் நான் இரண்டு வேடத்தில் நடித்திருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவை. சொல்லப்போனால் இதில் எனக்கு மூன்று விதமான ரோல் என்று கூட சொல்லலாம். தோற்றத்திலும் சரி, உணர்வுபூர்வமான நடிப்பிலும் சரி, உடல் அமைப்பிலும் சரி... மூன்று விதமான பரிமாணங்களில் என்னை மாற்றி நடித்துள்ளேன். அதனால் தான் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.


இரட்டை வேடத்தில் நடித்தபோது ஈஸியாக இருந்ததா.?


இரட்டை வேடத்தில் நடிப்பது அவ்வளவு ஒன்றும் சுலபம் அல்ல. இந்தப்படத்தில் தானுவின் ரோல் கொஞ்சம் சுயநலமானது. அதேசமயம் தத்துவின் ரோல் அனைவரையும் புரிந்து நடப்பவர் போன்றது. எல்லோரும் இது சுலபமான ரோல் அல்ல என்றார்கள், அதையே நான் சவாலாக ஏற்று செய்தேன். தானு, தத்து இரண்டு ரோல்களில் தத்துவின் ரோல் கஷ்டமாக இருந்தது. தானு ரோல் கொஞ்சம் சுலபமாக இருந்தது. ஆனாலும் இரண்டு ரோல்களும் கொஞ்சம் கஷ்டமானது என்று தான் சொல்வேன்.


உங்களது பார்வையில் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?


ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அந்தபடத்திற்கு வலுவான கதை இருக்க வேண்டும். ஹாலிவுட் படங்களான ஸ்பைடர் மேன், பேட்மேன் போன்ற படங்களை கூறலாம். தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படமும் அப்படிப்பட்ட கதை தான். முதல்பாகத்திற்கும், இரண்டாம் பாகத்திற்கும் துளியும் சம்பந்தம் இருக்காது. ஆனந்த் எல்.ராய் அவ்வளவு அழகாக இந்தப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்.


புதிய கதையா.... இல்லை இரண்டாம் பாகம் போன்ற கதையா...? உங்களுக்கு எது விருப்பம்?


எனக்கு புதிய கதையில் தான் எப்பவும் நடிக்க ஆசை. ஆனால் இந்தப்படத்தில் தனுஜா திரிவேதியின் ரோல் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் இப்படத்தில் நடித்தேன்.


பிகு படத்தை உங்களது குயின் படத்தோடு ஒப்பிட்ட போது எப்படி உணர்ந்தீர்கள்.?


நிச்சயமாக குயின் படத்திற்கு பிறகு எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் எனது படத்தை பிகு படத்தோடு ஒப்பிடுவதெல்லாம் ஏற்க முடியாது. ஏனென்றால் பிகு படத்தில் அமிதாப், தீபிகா, இர்பான் என மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் நடித்துள்ளனர். லன்ச் பாக்ஸ் படத்திற்காக இர்பான் கான் பாராட்டு பெற்றார். இப்போது நான். தனு வெட்ஸ் மானு படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.


10 ஆண்டுகளுக்கு பின் கங்கனா எந்த இடத்தில் இருப்பார்.?


நிச்சயமாக நான் இயக்குநராக இருப்பேன், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதேசமயம் நடிப்பையும் தொடருவேன். சிறுகதைகள், ஆன்மிகம் தொடர்பான புத்தகங்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். எதிர்காலத்தில் புத்தகம் எழுதலாம் என்று கூட எண்ணியுள்ளேன்.


இவ்வாறு கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in