மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
தமிழ் மற்றும் தெலுங்கு திரையில் வெற்றி நாயகியாக ஜொலிக்கும் நடிகை த்ரிஷாவுடன் காதல் கிசுகிசுக்களில் அடிபட்ட வகையில் தமிழ ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் ராணாவை ஆரம்பம் படத்தின் வாயிலாக நடிகர் அஜித் தமிழ் ரசிகர்களுக்கு மேலும் பரிட்சயப்படுத்தினார். ஆரம்பம் படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பெங்களூர் டேஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ராணா ஒப்பந்தமாகியுள்ளார்.
பெங்களூர்டேஸ் படத்தில் நடித்த பார்வதி மேனன் அதே வேடத்திலேயே தமிழிலும் நடிக்கிறார்.மலையாளத்தில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நஸிம் நடித்த முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆர்யா, பாபிசிம்ஹா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்கள். மேலும் பஹத் ஃபாசில் பாத்திரத்தில் ராணா நடிக்கிறார்.தெலுங்கில் பொம்மரீலு படத்தினை இயக்கிய இயக்குனர் பாஸ்கர் இப்படத்தினை இயக்குகின்றார்.
இப்படத்தில் தான் நடிகர் ராணா முதல் முறையாக மணக்கோலத்தில் நடிக்கின்றார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கின்றார். நடிகர் ராணாவின் ரீல் திருமண புகைப்படங்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. நடிகர் சிம்பு இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராணா நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.