மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பேஷன் டிசைனர் வி்க்ரம் பட்னிஸ் இயக்குநராக அறிமுகமாகும் நியா படத்தில் இருந்து, பிபாஷா பாசு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திலிருந்து, முன்னதாக ராணா டகுபதி விலகியிருந்த நிலையில், தற்போது பிபாஷா பாசுவும் விலக முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிப்பதற்காக, பிபாஷா பாசு, மே மாதத்தில் கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நிலையில், படப்பிடிப்பு, அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து விலகி, மற்ற படங்களில் நடிக்க பிபாஷா தீர்மானித்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.