ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கும், இயக்குநர் கென் கோஷ்க்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்க் விஸ்க் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கென் கோஷ், அடுத்ததாக, எக்ஸ்எக்ஸ் எக்ஸ் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நடிக்க, ஷாகித் கபூரை, கென் கோஷ் அணுகியிருந்தார். கால்ஷீட் பிரச்னை காரணமாக, ஷாகித் கபூர் அதில் நடிக்க மறுத்துவிட்டதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வளர்ந்துவரும் நிலையில், ஆபாச படத்தில் நடித்து பெயரை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்பதவடிப்படையிலேயே, ஷாகித், இப்படத்தை தவிர்த்துவிட்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய படம் தொடர்பாக, இருவருக்குமிடையே, மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கென் கோனு், தன்னை புதிய படம் தொடர்பாக அணுகவே இல்லை என்று ஷாகித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.