டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய கிரிக்கெட் அணி முக்கியமான அரையிறுதிப் போட்டியில் மோசமாக விளையாடி தோல்வியுற்று உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமலே போனது. லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்று, காலிறுதிப் போட்டியிலும் வென்ற இந்திய அணி, இப்படி அரையிறுதியில் தோற்ற நிலையைப் பார்த்து சமூக வலைத்தள ரசிகர்கள் நேற்று அதிகமாகவே கிண்டலடித்தனர். அவர்கள் பார்வை முழுவதும் சிட்னிக்கு மேட்சைப் பார்க்கச் சென்ற பாலிவுட்டின் முன்னணி நடிகையும், விராட் கோலியின் காதலி என்று சொல்லப்படுபவருமான அனுஷ்கா ஷர்மா மீதே திரும்பியது.
விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் அவுட்டாகித் திரும்ப அனுஷ்கா ஷர்மா அங்கு சென்றதே காரணம் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை அடித்துத் தள்ளிவிட்டனர். அதிலும் ஒரு கமெண்ட் சமூக வலைத்தளங்களில் நேற்று அதிகமாக உலவியது. ஷிகர் தவான் அவுட்டானதும், ரோகித் ஷர்மாவுடன் இணைந்து விளையாட விராட் கோலி களத்திற்குச் சென்றிருந்தார். போன வேகத்தில் அவர் அவுட் ஆகித் திரும்பியதும் அந்த கமெண்ட் பரபரப்பை ஏற்படுத்தியது.
“தோனி, விராட் கோலியிடம் நீ ஷர்மாவுடன் இணைந்து பொறுமையாக விளையாடு என்று சொன்னதை, விராட் கோலி, தோனி சொன்ன ஷர்மா, ரோகித் ஷர்மா என்று புரிந்து கொள்ளாமல், அனுஷ்கா ஷர்மா என்று நினைத்து சீக்கிரமே அவுட் ஆகி பெவிலியன் திரும்பிவிட்டார்,” என்ற கமெண்ட்டுதான் பரபரப்பாகச் சுற்றி வந்தது.
தோனி, மேட்ச் முடிந்து அளித்த பேட்டியில் கண்கள் கலங்கிய நிலையில் இருந்ததை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து தோனி ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையும் நேற்று மாலைக்குப் பிறகு பதிவு செய்திருந்தனர்.
'அரையிறுதிப் போட்டி அனுஷ்கா ஷர்மாவால போச்சி' என்பதுதான் நேற்றைய சமூக வலைத்தளங்களில் ஹைலைட்.